பத்து கிலோமீட்டர் போதாதா?

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2-

மக்களுக்காக அரசாங்கம் என்பதில் ஐயப்படத் தேவையில்லை. மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு இருக்கிறது ஆனால், இறுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் தங்கள் வீடுகள் இருக்கும் இடத்தில் இருந்து பத்து கிலோ பயணித்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

நோய்த்தடுப்புக்கான முன் நடவடிக்கை, மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் இரண்டாம் கட்டம் அமலில் இருக்கிறது. இச்சட்டம் இம்மாதம் 14 வரை நடப்பில் இருக்கும். இக்காலக்கட்டத்தில் வீட்டிற்கு அருகில் இடங்களில் மட்டுமே பொருட்கள் வாங்கிக்கொள்ள முடியும் என்றிருந்தது.

அந்நிபந்தனை சிலகட்டுப் பாடுகளுடன் இன்றுமுதல் தளர்த்தப்பட்டு 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பொருட்களை வாங்கிக்கொள்ள வழிசெய்கிறது.

இதையும் தாண்டிச் செல்லவேண்டிய அவசியம் இருக்குமானால் அதற்கான ஒப்புதல் கடிதம் இருக்கவேண்டும். பணிநிமித்தம் செல்வதாக இருந்தாலும் இதற்குப் பொருந்தும்.

இறப்பு போன்ற காரியங்களில் நெருங்கிய உறவினர்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மீறப்படும் குற்றங்களுக்கு ஆயிரம் வெள்ளி அபராதம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் குற்றம் செய்ய துணிச்சல் வராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here