ஜோகூரில் RM87,000 மதிப்புள்ள பட்டாசுகள் PPM போலீசாரால் பறிமுதல்; ஒருவர் கைது!

ஜோகூர் பாரு, ஜனவரி 23 :

இன்று அதிகாலை இங்குள்ள தாமான் புத்திரி வாங்சாவில் உள்ள ஒரு வளாகத்தில், மேற்கொண்ட சோதனையின் மூலம் RM87,000 மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகளை ஜோகூர் பிராந்தியத்தின் போலீஸ் படையினர் (Pasukan Polis Marin Wilayah Dua -PPM ) பறிமுதல் செய்துள்ளனர்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து நள்ளிரவு 12.15 மணிக்கு நடத்தப்பட்ட Op Khas நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக PPMஇன் பிராந்தியக் கமாண்டர் II துணை ஆணையர் முஹட் ஜைலானி அப்துல்லா தெரிவித்தார்.

பட்டாசுகளை சேமித்து வைத்ததாக சந்தேகிக்கப்படும் 47 வயதுடைய நபர் ஒருவர் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து,மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் குறித்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“சீன புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து உள்ளூர் சந்தைகளுக்கு சட்டப்பூர்வமற்ற முறையில் விநியோகம் செய்வதற்காக இன்னும் பட்டாசுகள் இருப்பதாக நம்பப்படுகிறது”.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு வகையான பட்டாசுகள் மற்றும் பட்டாசுகள் அடங்கிய மொத்தம் 67 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த வழக்கு வெடிபொருள் சட்டம் 1957 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழிசெய்கிறது.

குற்றச் செயல்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் 07-2372221 என்ற எண்ணில் Pasukan Polis Marin Wilayah Dua படைக்கு அனுப்பலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here