எம்.எஸ்.யூ.எம்.சி டிரைவ்-த்ரு வழி கோவிட் -19 பொது மக்களுக்கான சோதனை

ஷா ஆலம்:

 எம்.எஸ்.யூ மருத்துவ மையம் (எம்.எஸ்.யூ.எம்.சி) சிறப்பு மருத்துவமனை தனது டிரைவ்-த்ரு வழி கோவிட் -19 சோதனையை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

MSUMC டிரைவ்-த்ரூ வழி கோவிட் -19 டெஸ்ட் (சோதனை) திங்கள் முதல் வெள்ளி வரை மூன்று பிரிவுகளாக  (காலை 10.00 மணி முதல் மாலை 4 மணி வரை)  மற்றும் சனிக்கிழமை  (காலை 10.00- மதியம் 12.00)  வரை இந்த சேவை வழங்கப்படுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 03-5526-2800 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது ஆன்லைன் வழி கோவிட்-19 சோதனைக்காக நேரத்தை பெறலாம், அல்லது  03-5521-6701 என்ற தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம்  நியமனங்களை முன்கூட்டியே பெறலாம். நியமனம் உறுதிப்படுத்தப்பட்ட ரசீது பெற்ற பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களது டிரைவ்-த்ரூ சந்திப்புக்கு வரலாம்.

டிரைவ்-இன் மூலம் உள்வரும் நோயாளிகள் பில்லிங் நிலையத்திற்கும் பின்னர் சோதனை நிலையத்திற்கும் செல்வதற்கு முன் பதிவு நுழைவாயிலில் வழங்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஒரு நபருக்கு சுமார் 5 நிமிடங்கள் எடுக்கும் இந்த சோதனை, தலைகீழ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (ஆர்.டி.-பி.சி.ஆர்) முறையைப் பயன்படுத்துகிறது, இது ஓரோபார்னீஜியல் (டான்சில்) மற்றும் நாசோபார்னீஜியல் (நாசோபார்னக்ஸ் – தொண்டையின் மேல் பகுதி) ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் மூக்கு மற்றும் மண்டை ஓட்டின் அடிப்பகுதிக்கு அருகில்). சோதனைக்கு உட்பட்ட நோயாளிகள் 24 முதல் 48 மணிநேரங்களுக்கு இடையில் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் சோதனை முடிவுகளை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சோதனை முடிவு வரும் வரை சம்பந்தப்பட்ட தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here