பதுங்கிப் பாயும் பணம் தின்னிகள்

கோப்பு படம்

கோலாலம்பூர், ஏப்ரல் 3-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு தொடங்கிய நாளிலிருந்து பணமுதலைகளின் நடமாட்டம் வெகு உஷாராகிவிட்டது என்று ம.சீ.ச பொதுத்தொடர்பு அதிகாரரியான டத்தோஶ்ரீ மைக்கல் சோங் தெரிவித்திருக்கிறார்.

முகம் தெரியாதவர்களுக்குக் கடன் இல்லை. பழக்கப்பட்டவர்களுக்கே கடன் வழங்க வட்டி முதலைகள் முன்வருவதாகத் தெரிகிறது.

அனுமதியில்லாத முதலைகள் தலைமறைவாகிவிட்டனர். பிரச்சினையான காலத்தில் கடனைத் திரும்ப்பப் பெறுவதில் சிக்கல் இருக்கும் என்பதால் கடன் தருவது மறுக்கப்படுவதாக மைக்கல் சோங் தெரிவித்தார்.

கடன் பெற விழைவின்றவர்களைத் தேர்வு செய்தே கடன் வழங்க இசைகின்றனர்.

சில ஏமாற்றுப் பேர்வழிகள் இச்சந்தர்ப்பத்தைச் சாதககமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதிலும் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். ஏமாற்றுப்பேர்வழிகள் வட்டி முதலைகளாக நடமாடுவதாகாவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here