எம்சிஓ தடையை மீறியவர்கள் – நீதிபதிகள் சிறைச்சாலை நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்

பெட்டாலிங் ஜெயா: மக்கள் நடமாட்ட தடை உத்தரவை  (எம்.சி.ஓ) மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கும்போது சிறைகளில்  இருக்கும் அதிக எண்ணிக்கையிலான கூட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மலாயாவின் தலைமை நீதிபதி டான் ஸ்ரீ தெங்கு மைமுன் துவான் மாட் (படம்) நீதிபதிகளை வலியுறுத்தியுள்ளார்.

கூட்டரசு  நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்5) வெளியிட்ட அறிக்கையில், சிறைச்சாலைகள் தொடர்பாக சிறைச்சாலைத் துறை தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ சுல்கிஃப்லி உமரிடமிருந்து MCO ஐ மீறுபவர்களைப் குறித்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியது.

மலாயாவின் தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து நீதித்துறை அதிகாரிகளுக்கும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, கோவிட் -19 பரவுவதற்கான ஆபத்து தொடர்பான பிரச்சினை எதிர்கொள்ளக்கூடும் MCO ஐ மீறியவர்களுக்கு தண்டனை வழங்குவதில் மலேசியாவில் உள்ள சிறைச்சாலைகளும் பரிசீலிக்கப்பட வேண்டும்  என்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கு அனுப்பப்படும் எம்.சி.ஓ.வை மீறுபவர்களின் சுகாதார நிலை அறியபடாததால் கோவிட் -19 தாக்கமாக  அவை மாறக்கூடும் என்று சிறைச்சாலை  கவலை கொண்டுள்ளது என்று சனிக்கிழமை (ஏப்ரல் 4) ஒரு கடிதத்தில் சுல்கிஃப்லி தெரிவித்ததாக அறியப்படுகிறது.

கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறைகளில் சமூக இடைவெளி “சாத்தியமற்றது” என்றும் அவர் கூறினார். MCO ஐ மீறியதற்காக ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 378 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுல்கிஃப்லி தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here