சிகாமாட் ஆற்றில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது

சிகாமாட்:

பூலோ கசாப் அருகேயுள்ள கம்போங் பாலாய் பாடாங் ஆற்றில் விழுந்ததாக நம்பப்படும் ஒரு முதியவரை கண்டுபிடிக்கும் வகையில், அங்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று (மே 24) மாலை 4.47 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிகாமாட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு தலைவர் சுரைமி ஹாருன் தெரிவித்தார்.

“நேற்றுக்காலை 9 மணி முதல் தனது 66 வயது கணவரைக் காணவில்லை என்று பெண்மணி ஒருவரிடமிருந்து புகார் கிடைத்தது என்று அவர் சொன்னார்.

“பாதிக்கப்பட்டவர் காணாமல் போனதாக நம்பப்படும் இடத்திலிருந்து உடனடியாக ஆற்றைச் சுற்றி கண்காணிப்பை மேற்கொண்டதாகவும், சிகாமாட் மற்றும் பந்தர் பாரு சிகாமாட் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 14 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் இன்னும் தேடல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ,” அவர் இன்று சனிக்கிழமை (மே 25) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here