தொழிற்சாலைகள் ஒருமாதத்திற்கு மூடல் சிங்கை அறிவிப்பு

சிங்கப்பூர்

சிங்கப்பூர்  ஏப்ரல் 5-

பொருளாதாரத் துறைகள் தவிர்த்து, பள்ளிகளையும் பெரும்பாலான பணியிடங்களை ஒரு மாதத்திற்கு மூடுப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்திருக்கிறார்., நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளில் இம்முறை அனுசரிக்கப்படும்.

நோய்த் தொற்றுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.. இதைத்தடுப்பதற்கான முயற்சியாகவே ஒருமாதம் வரை பணியிட மூடல் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உணவு நிறுவனங்கள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், கிளினிக்குகள், மருத்துவமனைகள், போக்குவரத்து, முக்கிய வங்கிச் சேவைகள் திறந்திருக்கும். நகர-அரசு அதன் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் வீட்டிலிருந்தே கற்கும் படி இருக்கும். முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் .

தங்கள் சொந்த வீட்டைத் தாண்டி மற்றவர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் லீ கேட்டுக்கொண்டார்.

போதுமான உணவு பொருட்கள் நாட்டில் கைவசம் உள்ளன என்பதால் அவசரப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here