கோத்த கினபாலு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குறிப்பிட்ட சத்தான சீரான உணவு தேவை என்று மலேசியா சபா பல்கலைக்கழகத்தின் (யுஎம்எஸ்) ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் யாஸ்மின் ஓய் கூறுகிறார்.
அனைத்து சத்தான அதே நேரம் மிதமான அளவில் கொண்ட ஒரு சீரான உணவை உட்கொள்ளுங்கள். மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டுத் தடை (MCO) காலத்தில் பல மலேசியர்கள் மளிகை கடைக்கு செல்லும் போது காய்கறிகளையும் பழங்களையும் சேர்க்க மறந்துவிடுகிறார்கள்.
நீங்கள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கான மளிகை பொருட்களை வாங்குகிறீர்களானால் முதலில் சீக்கிரம் ஜீரணிக்ககூடிய காய்கறிகளை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள், பின்னர் தக்காளி மற்றும் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளுடன வெண்டைக்காய், பீன்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என ஓய் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் எம்சிஓ காலகட்டத்தில் அரிசி மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றை அதிகம் எடுக்க வேண்டாம் என்றார். சூப் மற்றும் வேகவைத்த காய்கறிகள் இப்பொழுதைய காலகட்டத்திற்கு சிறந்த உணவாகும்.
ஏராளமான நீரைக் அருந்துங்கள் என்று அவர் மேலும் கூறினார், பிளாட், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது ஒற்றை மாடி வீடுகள் போன்ற வரையறுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் சிறிய அளவிலான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
குணப்படுத்துவதை விட தடுப்பு எப்போதும் சிறந்தது என்பதை அவர் மக்களுக்கு நினைவுபடுத்தினார்.
இந்த MCO காலகட்டத்தில், நாம் அனைவரும் வீட்டில் தங்குவதற்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும், மேலும் சோப்புடன் கைகளை கழுவுவது போன்ற நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.