கோலாலம்பூர், ஏப்ரல் 6-
போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுதான் என்று பொலீசார் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும் என்று டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் இறுக்கத்தை உடைப்பதற்கான ஒரே வழி மக்கள் இயக்கத்தைக் கூடிய மட்டும் குறைப்பதுதான். பொதுமக்கள் இதை தவறாகப் புரிந்துகொணடிருக்கின்றனர்.
கோவிட் -19 பரவுவதைத் தடுக்க ,சாலைத்தடுப்புகளையே முதன்மை வழியாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. சேவைத் துறையில் உள்ளவர்களை அடையாளப்படுத்திக்கொள்ள மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடே முக்கியமானதாக இருக்கிறது என்பதால் சேவைத்துறைக்குப் போகின்றவர்களைத் தடுக்க முடியாது.
அவர்கள் சாலைத் தடைகள் வழியாகச் செல்லதே பல வகையில் நல்லது என்றார் அவர். சாலைத்தடுப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கடந்து செல்ல வேண்டும்.
தேவையில்லாமல் வெளியேறுவதைத் தவிர்ப்பதுதான் பொதுமக்களுக்கு நல்லதாக இருக்கும். இதற்குப் பொறுமையாக இருக்க வேண்டும் என்று அப்துல் ஹமீட் கூறினார்.
மக்கள் நடமாட்டக்கட்டுப்பாடு காலத்தில் ஏற்படும் நெரிசலுக்குப் பொதுமக்களே காரணம். வழக்கமான நெரிசலைவிட மோசமான நெரிசலும் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் 15 நிமிடத்திற்குள் சாலை நெரிசல் குறைந்துவிடும் என்பதால் கோபப்பட பெரிய காரணம் ஏதுமில்லை.
கடமையில் இருக்கும் போலீஸ்காரர்களை அமைதியாவும் பொறுமையாகவும் இருக்கும்படி பணித்திருப்பதையும் அவர் கூறுகிறார்.
சாலைத்தடுப்பு ஆபத்தானது என்று உணர்ந்தாலும் கடமை கருதி ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆயுதப்படை உறுப்பினர்கள், பணிசெய்வதை தவறாக விமர்சிக்கக் கூடாது என்றார் அவர் .
அவர்கள் அனைவரும் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க உதவுகிறார்கள். வெறுமனே சாலை நெரிசலை ஏற்படுத்தும் கண்காட்சிக்காக அல்ல.