பாங்கி:
நாட்டில் பணியாற்றும் 4,352 கிரேடு UD10 மருத்துவ அதிகாரிகளில் 3,850 பேர் அரசாங்கத்தின் நிரந்தர நியமன சலுகையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிஃப்லி அஹ்மட் உறுதிப்படுத்தினார்.
இந்த அதிகாரிகள் அனைவரும் அக்டோபர் 2 முதல் சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள நாடு தழுவிய சுகாதார சேவை நிலையங்கள் அல்லது நிறுவனங்களில் பணியில் சேர்ந்துகொள்ளவுள்ளனர்.
“நிரந்தர நியமனத்தை ஏற்றுக்கொண்ட விகிதம் முந்தைய ஆண்டுகளோடு ஒத்துப் போகிறது. ஆனால் இந்த முறையில் சபா மற்றும் சரவாக் உட்பட மூன்று வேலைவாய்ப்பு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவறான பணியாளர் சேர்க்கை சிக்கல்களைத் தீர்க்க உதவும்,” என்று ஜுல்கிஃப்லி விளக்கினார்.






















