எம்சிஓ எதிரொலி – காஜாங்கில் 8 சாலைகள் நாளை முதல் மூடப்படும்

கோலாலம்பூர் (பெர்னாமா)  : காஜாங்கில் நாளை (8/4/20) தொடங்கி 8 சாலைகள் மூடப்படுவதோடு  மேலும் அதிகமான சாலை தடுப்புச் சோதனைகள் ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி  அகமட் தசாஃபிர் முகமது யூசோப் தெரிவித்தார்.

கோவிட்-19 தாக்கத்தினால் அரசாங்கம் அறிவுறுத்தி உள்ள நடமாட்ட  தடை உத்தரவினை  தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக காஜாங் பட்டணத்தை நோக்கி செல்லும் மக்களை கட்டுபடுத்துவதாகும் என்றார்.

ஜாலான் சுங்கை சுவா-கேடிஎம் டன்னல் ஸ்லிப் ரோடு; ஜாலான் ரெகோ-எம்ஆர்டி; ஜாலன் செராஸ்- ஜாலான் திமூர் (காஜாங் ஜமேக் மசூதிக்கு எதிரே); ஜாலான் செமெனி-ஜாலான் லோ டி கோக்; ஜலான் டிடிடிஐ க்ரோவ் 2/1 பெர்சியாரன் செளஜானா இம்பியன் மற்றும் ஜலான் டி.டி.டி.ஐ க்ரோவ் 1/1 ஆகிய சாலைகள் மூடப்படும்.

பெர்சியரான் செளஜானா இம்பியன்-ஜாலன் மெலோர் 1; தேசா ஜெனரிஸ் மற்றும் பெர்சியரான்  செளஜானா இம்பியன் ஆகியவற்றை உள்ளடக்கிய  ஜாலான் சுங்கை காந்தன் மற்றும் பண்டார்ஶ்ரீ புத்ரா- நீலாய் 3 ஆகிய எல்லைகளின்  சாலைகள்  மூடப்படும் என்று அவர் திங்களன்று (ஏப்ரல் 6) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சாலை மூடல்களால், பெர்சியரன் செளஜானா இம்பியன் மற்றும் கிராண்ட் சாகா நெடுஞ்சாலையிலிருந்து மாற்று பாதையாக  ஜாலான் செராஸ் வழியாக காஜாங் வரையிலும், சுங்கை சுவாவிலிருந்து சில்க் நெடுஞ்சாலை வழியாக கிராண்ட் சாகா நெடுஞ்சாலை வழியாக ஜாலான் செராஸ் காஜாங் வரையிலும் பயணிக்கலாம்.

இதர மாற்று சாலைகள் ஜாலான் ரெக்கோவிலிருந்து சில்க் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். ஜாலான் புக்கிட்காஜாங் நகரம் வரையிலும்  ஜாலான் லோ டி கோக்,  ஜாலான் செம்பகா குனிங் வழியாக ஜாலான் திமூர், செம்பகா புத்தே காஜாங் நகரம், காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை நோக்கிய பாதை, காஜாங் நீதிமன்றம், எம்.பி.கே.ஜே, காஜாங் பிளாசா மருத்துவ மையம் ஜாலான் திமூர் மற்றும் செம்பகா குனிங் வழியாக செல்லலாம்.

இதற்கிடையில், மாவட்டத்தில் இதுவரை ஏழு சாலைத் தடைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவை கிராண்ட் சாகா நெடுஞ்சாலையில் (கோலாலம்பூர் செல்லும்) உள்ளன என்றும் அஹ்மத் தசாஃபிர் கூறினார்; காஜாங் டோல் பிளாசா, பாங்கி டோல் பிளாசா, பண்டார் ஸ்ரீ புத்ரா டோல் பிளாசா, காஜாங் செலட்டன் டோல் பிளாசா (லிக்காஸ்), பத்து 21 சுங்கை லூய், ஹுலு லங்காட் மற்றும் எஸ்.ஜே.ஆர் பட்டு 24 சுங்கை லூயி, ஹுலு லங்காட் ஆகிய சாலைகளாகும்.

பெஸ்ராயா நெடுஞ்சாலையின் (யுபிஎம் எல்லைக்குட்பட்ட) கேஎம் 1 இல் மேலும் மூன்று சாலைத் தடைகளை போலீசார் கூட்டும் என்று அவர் கூறினார்; சுங்கை ரமல் தலாம் (புத்ராஜெயா- வரைக்குட்பட்டது); மற்றும் ஜாலான் செராஸ் பத்து 14 (கேபிஜே காஜாங்-காஜாங்கை எதிர்பாதை) ஏப்ரல் 8 நள்ளிரவு முதல் அதிகமான சாலை தடுப்புகளை  தொடங்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here