கோலாலம்பூர்: பாழடைந்த நிலைமைகள் மற்றும் சுகாதாரமற்ற வசதிகள் கொண்ட ஹோட்டலில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்துள்ள தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலரை அதிர்ச்சியடையச் செய்தன.
அடைத்து வைக்கப்பட்ட கழிப்பறைகள், மூட்டை பூச்சிகள், தூசி நிறைந்த படுக்கை மற்றும் மோசமான உணவு ஆகியவற்றால் அவர்களின் மிகவும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.
கோவிட் -19 தொற்றுநோயால் மலேசியர்களை தற்காப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை காலை தென்னிந்தியா திருச்சிராப்பள்ளியில் இருந்து திரும்பி வந்தவர்களில் 148 தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் அடங்குவர்.
மலேசியர்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டியது இப்போது கட்டாயமாக இருந்தாலும், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KLIA) புறப்படுவதற்கு சற்று முன்னர் தான் அவர்கள் தங்குமிடம் குறித்து அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
மலாக்கா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஆர். சங்கரி (வயது 22) கூறுகையில் கோலாலம்பூர் செளகிட் அருகில் உள்ள தங்குமிடம் என்று தெரிவித்தனர்.
நாங்கள் அங்கு வந்தபோது, ஹோட்டல் வெளியில் இருந்து பார்த்த போது எதுவும் தெரியவில்லை. அவர்கள் எங்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர், டவர் ஏ-யில் 19 பேரும், டவர் பி-யில் 129 பேரும் இருந்தனர். ஆனால் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம்.
சங்கரியின் விஷயத்தில், அவளுடைய அறையின் கழிப்பறை அடைக்கப்பட்டு, பிளாஷ் பொத்தானைக் கொண்டிருக்கவில்லை. அறையே மிகவும் மோசமாக வைக்கப்பட்டுள்ளது, படுக்கையிலும் இருக்கைகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க அடுக்கு தூசி உள்ளது. பல கரப்பான் பூச்சிகளைச் சுற்றி வருவதைக் கண்டதும் குறிப்பாக அதிர்ச்சியாக இருந்தது.
மற்ற தனிமைப்படுத்தப்பட்ட மக்களும் நானும் நிர்வாகத்தைப் பற்றி ஏதாவது செய்ய முயற்சித்தோம், ஆனால் அதற்கு பதிலாக, நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் வரவேற்பை அழைக்கும் போதெல்லாம் அவர்கள் எங்கள் குரல்களைக் கேட்டவுடன் போனை வைத்து விடுகிறார்கள் என்று அவர் கூறினார்.
சரியாக வேக வைக்காத உணவுகள், நம் பராம்பரியத்திற்கு ஒவ்வாத உணவுகள் ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. நேற்று புதிய சமையல்காரர் வரவழைக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு சைவ உணவினை வழங்கினர்
நாங்கள் ஆடம்பரமாக தங்க இடம் கேட்கவில்லை. ஆனால் அடிப்படை வசதி கொண்ட தங்குமிடமாக இருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள எங்கள் மனநிலை சீராக இருக்க தங்குமிடம் அடிப்படை வசதி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றார்.
வயதானவர்கள், குழந்தைகள் என பலர் இங்கு தங்கி இருக்கின்றனர். அவர்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கோவிட்-19 வைரஸ் தொற்றாமல் இருக்க நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். ஆனால் இது போன்ற சூழ்நிலையில் நாங்கள் இரண்டு வாரம் தங்க வைப்பட்டிருந்தால் வேறு நோய்கள் தாக்கும் என்று சங்கரி கவலையுடன் தெரிவித்தார்.
சங்கரி கூறியதை போல் மற்றவர்களுக்கும் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்தனர்.