கொரோனாவுக்கு மருந்து உண்டா?இல்லையா?

மருந்து உண்டா? இல்லையா?

கோலாலம்பூர், ஏப்.9-

தடுப்பு மருந்து உள்ளது. தீவிர ஆய்வு நடத்தப்படுகிறது என்றெல்லாம் கூறப்பட்டு குளோரபின் மருந்தைக் கொடுக்காவிட்டால் இந்தியாவுடனான உறவில் முறிவு ஏற்படும் என்பது வரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது.

கொரோனாவுக்கு மருந்து உண்டா இல்லையா?

மருந்தை நான் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். மலேசிய சுகாதார அமைச்சு அங்கீகாரம் தரவில்லை. மலேசிய இந்தியர்களே. உடனே ஓடிப் போய் வேப்ப மரத்தில் சிவப்புத் துணியைக் கட்டுங்கள். வேப்ப மரங்களை நமது உடைமை ஆக்கி விடுவேம் என பினாங்கிலிருந்து சித்த மருத்துவர் என தம்மை அறிவித்துக் கொண்டுள்ள பி.கே.சந்திரன் என்பவர் வாட்ஸ் அப் தூது அனுப்பி வருகிறார்.

வெற்று ஆடியோவை மட்டுமே அனுப்பி வரும் இவர் மலேசியர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இவருக்கு ஒரு படி மேலே செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா மருந்துகளை கண்டுபிடித்திருப்பதாக கரடி விடுகிறார்.

இந்தியாவுக்கான சீனத்தூதர் தம்மை வந்து சந்தித்திருப்பதாக இவர் கூறுகிறார்.

வைரஸ் தாக்கத்தின் அளவு என்ன? கண்டுபிடித்ததாகக் கூறும் மருந்தின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தெல்லாம் இவர் தெரிவிக்கவில்லை.

தான் கூறிய மருந்தை சீனா பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதனை இந்தியாவுக்கும் விற்கப் போவதாக இவர் வாட்ஸ் அப்பிலேயே கரடி விடுகிறார்.

இவர் கூறிய மருந்தை தயார் செய்யும் சீனா அதனை இந்தியாவிடம் விற்பதாக இருந்தால் பிறகு எதற்கு டிரம்ப் மருந்தைக் கொடுங்கள் என்று இந்தியாவிடம் கையேந்த வேண்டும்.

ஒன்று மட்டும் புரிகிறது…

உலகமே அழியப் போகிறது என்றாலும் ஒரு சில குரோனர்கள் இப்படி வெளியே வந்து மலிவு விளம்பரம் தேடிக் கொள்வார்கள் என்பது மட்டும் புரிகிறது.

தற்போதைய சூழலில் இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் குளோரபில் மருந்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன என்பது மட்டுமே ஆதாரபூர்வமான செய்தியாக உள்ளது.

சிங்கப்பூர் அரசு மஞ்சளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

குளோரபில் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் “பச்சையம்” என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

மிக அதிகமான பச்சையத்தை வேப்பிலை கொண்டுள்ளது என்பது உபதகவல்.

வேப்பிலையும், மஞ்சளும் கொரோனாவை நேரடியாக முடக்கி விடாது என்பதையும் கொரோனா கொண்டு வரும் இதர பக்க விளைவுகளை பச்சையம் கட்டுப்படுத்தும் என்பதே உண்மை நிலை.

உலக வல்லரசான அமெரிக்கா இந்தப் பச்சையத்திற்காக இந்தியாவின் தயவை எதிர்பார்த்துக் கிடக்கிறது.

மனித குலம் உயிர் பிழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பச்சைய மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக இந்தியாவும் அறிவித்துள்ளது.

ஆக, பச்சையம் அதிகம் உள்ள வேப்பிலைகளுக்கு தற்போது மவுசு கூடி வருகிறது.

இதே வேப்பிலையைப் பயன்படுத்தி போலி வைத்தியர்களும் மலேசியாவிலும் தமிழகத்திலும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாட்ஸ் அப் வைத்தியர்கள் ஆதாரங்களை முன்வைக்காமல் ஏதொ அகில உலக கண்டுபிடிப்பை கையில் வைத்திருப்பது போல பேசுவதை பொது மக்கள் நம்பத் தேவையில்லை.

உங்களுக்கும் எனக்கும் தெரிந்த அதே வேப்பிலையை வைத்துதான் இவர்கள் வேறு கோணத்தில் இந்திய சமுதாயத்தின் முகத்தில் சாணி அடிக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here