நிறுவனங்களின் உதவி நிறைவானது -டத்தோஶ்ரீ வீ கா சியோங்

டத்தோஶ்ரீ வீ கா சியோங்

கோலாலம்பூர், ஏப்.9-

தேவை அறிந்து சேவை செய்வது ஒருவகை. கேட்டறிந்து சேவை செய்வது இன்னொருவகை. அவசரம் உணர்ந்து தேவைக்கு உதவுவது என்றெல்லாம் நாட்டின் நிறுவனங்கள் பல உதவிக்கு வருவதைப் பாராட்டினார் போக்குவரத்து அமைச்சர் டத்தோஶ்ரீ வீ கா சியோங்.

நாட்டின் இக்கட்டான நிலைக்கு உதவுவது மனிதாபிமானத்தையும் தாண்டிய நிலை. மகோன்னதம் என்று கூறினாலும் தகும்.

பல நிறுவனங்கள் முன் வந்து உதவுவது பிரமிக்க வைப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஃபாஜார் கட்டுமான நிறுவனக் குழும இயக்குநர் டத்தோ ஶ்ரீ எரிக் குவான் என்பவர் மலேசிய மருத்துத்துறைப் பயன் பயன்பாட்டுக்கென 250,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை வழங்கியிருப்பதை ஜோகூர் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ வீ கா சியோங் கூறினார்.

வழங்கப்பட்ட பொருட்கள் மருத்துவ முன்னணியாளர்களுக்கு மிகவும் அவசியாமானதாக இருக்கின்றன. முகக்கவசங்களும் அதில் இருக்கின்றன.
சிரமமான நேரத்தில் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் செயலாக இது அமைகிறது என்றார் அவர்.

நிறுவனத்தின் செயல் பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் கடமை என்று வரும்பபோது உதவி செய்வது முதன்மையானது என்பதை ஃபாஜார் கட்டுமான குழுமம் உணர்த்தியிருக்கிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here