வாஷிங்டன்,ஏப்ரல் 09-
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடுகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1,940- பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனர். தொடர்ந்து 2-வது நாளாக அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு நாளில் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 14,788 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவால் 434,927- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சுமார் 23 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.