சபா, சரவாக்கில் அறிமுகமானது புதிய மலேசியச் கடவுச்சீட்டு: கட்டம்கட்டமாக விநியோகிக்க குடிநுழைவுத் துறை நடவடிக்கை!

கோலாலம்பூர்:

பா மற்றும் சரவாக் மாநிலங்களில் புதிய மலேசிய அனைத்துலகக் கடவுச்சீட்டுகளைப் (Passport) பொதுமக்கள் பெறுவதற்கான கட்டம் கட்டமான விநியோக முறையை மலேசியக் குடிநுழைவுத் துறை இன்று முதல் தொடங்கியுள்ளது.

குடிநுழைவுத் துறை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவ்விரு மாநிலங்களிலும் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் இரண்டு கட்டங்களாக புதிய கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளன:

கட்டம் 1 (ஜூலை 27 முதல்): பிந்துலு (Bintulu), ஸ்ரீ அமான் (Sri Aman), கூச்சிங் (Kuching), மீரி (Miri), சிபு (Sibu), கோத்தா கினபாலு (Kota Kinabalu), தவாவ் (Tawau) மற்றும் கெனிங்காவ் (Keningau) ஆகிய நகரங்களில் உள்ள நகர்ப்புற உருமாற்ற மையங்கள் (UTC) மூலம் புதிய கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும்.

கட்டம் 2 (ஆகஸ்ட் 3 முதல்): கூச்சிங், லாவாஸ் (Lawas), லிம்பாங் (Limbang), கோத்தா கினபாலு, சந்தாக்கான் (Sandakan), கோத்தா கினபாலு சர்வதேச விமான நிலையம், லஹத் டத்து (Lahad Datu) மற்றும் லபுவான் (Labuan) UTC அலுவலகங்களில் விநியோகம் தொடங்கும் என்று அது தெரிவித்துள்ளது.

குறிப்பிட்டுள்ள அலுவலகங்களில் மட்டுமே அந்தந்தக் குறிப்பிட்ட தேதிகளில் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9கடந்த ஜூன் 30-ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய மலேசியக் கடவுச்சீட்டில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 94 பாதுகாப்புச் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள், ஜூலை 1 முதல் தங்களின் தேவைகளுக்கேற்ப 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லும் கால அளவிலான புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

புதிய கடவுச்சீட்டுகளைப் பெறப் பொதுமக்கள் அவசரப்படத் தேவையில்லை என்றும், தற்போது பயன்பாட்டில் உள்ள கடவுச்சீட்டுகள் காலாவதியாகும் திகதிக்கு 6 மாதங்கள் முன்பு வரை செல்லுபடியாகும் என்றும் குடிநுழைவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள் தாங்கள் செல்லவிருக்கும் அலுவலகங்களின் பட்டியலை முன்னதாகவே சரிபார்த்துத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் தொடக்கத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 71 அலுவலகங்களிலும் புதிய கடவுச்சீட்டு விநியோகம் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here