கள்ள வேட்டை காலியாகியிருக்கிறது

கோப்பு படம்

ஜோகூர், ஏப்.10-

மக்கள் நடமாட்டக் கூடல் இடைவெளி அமலாக்கம் மார்ச் 18 தொடங்கியதில் மனிதர்களை விட காட்டு மிருகங்கள் எல்லையில்லா மகிழ்சியில் இருக்கின்றன என்று ஓர் அறிக்கை கூறுகிறது.

மிருகங்களை விட மனிதர்கள் கொடூரமானவர்கள், கள்ளத்தனமாக காட்டுக்குள் நுழைந்து சட்டத்துக்குப் புறம்பாக வேட்டையாடுவதில் பலே கில்லாடிகள் என்பதை நிரூபித்தும் வருகின்றனர்.

ஆனால், மார்ச் 18 ஆம் நாள் தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தால் ஜோகூர் வட்டாரத்தில் நடமாட்டம் கட்டுக்குள் குறைந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மிருகங்களை வேட்டையாடி விற்றுப்பிழைக்கும் அந்நியக் கூட்டம் இப்போது நடமாட்டக் கட்டுப்பாட்டில் முடங்கிக்கிடப்பதால் காட்டில் வாழும் பிராணிகள் வேட்டையாடுவதிலிருந்து சுதந்திரமாக இருப்பதாக தேசிய வனத்துறை இயக்குநரான சல்மான் சாஅபான் கூறியிருக்கிறார்.

கோத்தாதிங்கி, மெர்சிங் காடுகளில் சட்டவிரோத வேட்டைகள் வழக்கமானது . அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கள்ளத்தனமாக வேட்டையாடி வருகின்றனர்.

இப்பகுதிகளில் 16 வனத்துறை வீரர்கள் இருபிரிவுளாக ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இக்காலக்கட்டத்தில் சுழியம் விழுக்காடாக வேட்டை அமைந்திருக்கிறது என்பதால் வனப்பிராணிகளுக்கான கள்ளச்சந்தை காலியாகியிருக்கிறது என்று சல்மான் கூறினார்.
சாலைத்தடுப்புகள் பல குற்றங்களைக் குறைத்திருக்கின்றன. போலீசார், ராணுவத்தினரின் அயராத பணியால் இக்குற்றங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன என்றார் அவர்.

கள்ள வேட்டைகளால் கட்டுப்படுத்தப்பட்ட வனப்பிராணிகள் அழிந்துவருகின்றன. ஆதலால் அழிவிக்கு எதிரானவர்கள் வேட்டையாடப்படவேண்டும். இதற்காக ரோந்து நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here