ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் பிரதமர் கடிதம்

பிரேசிலியா –

இராமாயணத்தில் உள்ள சஞ்சீவி மூலிகைபோல், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி உதவ வேண்டும் என பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ராமரின் சகோதரரான லட்சுமணரைக் காப்பாற்ற கடவுள் அனுமன் இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகை எனும் புனித மருந்தை எடுத்து வந்தார். தற்போது கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும உலகளாவிய பிரச்சினையை இந்தியாவும் பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும்.

அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து லட்சுமணன் உயிரைக் காப்பாற்றியதுபோல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும். ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தைப் பிரேசி லுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here