வளர்ப்புப்பிராணிகளிடம் கொஞ்சல் வேண்டாம்!

வளர்ப்பு பிராணிகள்

கோலாலம்பூர், ஏப்.10-

மனிதர்களைத் தாக்கும் கொரோனா-19 வளர்ப்புப் பிராணிகளுக்கு வராதா? என்ற ஐயம் பலருக்கு எழுந்திருக்கிறது. இந்த ஐயம் நியாயமானதுதான் என்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

மிருகக் காட்சியகத்தில் உள்ள புலி ஒன்று கொரோனா -19 தாக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியின் எதிரொலியால் இந்த ஐயம் எழுந்திருக்கலாம். ஆனாலும் இது நியாயமான சந்தேகம் என்பதாகவே இருக்கிறது.

மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியதாகவும் கூறப்படும் கொரோனா- 19 , மனிதர்களிடமிருந்து மிருகங்களுக்கும் பரவும் என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.

மிருக வைத்திய துறையின் தலைமை விரிவுரையாளர் டாக்டர் ஃபாரினா முஸ்தாஃபா கமால் கூறியிருக்கும் செய்தி சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

மிருகங்களுக்கும் 14 நாட்கள் தனிமை அவசியம் என்கிறார் அவர். குறிப்பாக வீட்டுப்பிராணிகள் என்பதைத்தான் அவர் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

மனிதர்கள் செல்லமாக வளர்க்கும் பிராணிகளுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா -19 தொற்றும் சாத்தியம் மிக அதிகாமாக இருக்கிறது. மனிதன் மீது சந்தேகம் எழுமானால் அவன் வளர்க்கும் பிராணிகள் மீதும் சந்தேகம் எழவேண்டும் . அதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் வேண்டும்.

இது ஒரு செய்தியாக இருந்தாலும் இதுவரை வளர்ப்புப் பிராணிகளுக்குக் கொரோனா -19 தொற்று ஏற்பட்டிருக்கும் அறிகுறி இல்லை என்று மிருகங்களின் உலக சுகாதார அமைப்பான (OIE) தெரிவித்திருக்கிறது.

வளர்ப்புப் பிராணிகளை அணைப்பது ,முத்தமிடுவது, வீட்டில் நடமாட விடுவது என்பது பலரின் இயல்பான நடவடிக்கையாக இருப்பதால், தொற்றிலிருந்து தொற்று என்பதாக ஆகிவிடும் என்று மிருகங்களுக்கான புத்ரா அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளரான டாக்டர் ஃபாரினா தெளிவுரைக்கிறார்.

பெல்ஜியம் நாட்டில் உள்ள பூனைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு , மூச்சுவிட் சிரமம் ஏற்பட்டதை அவர் குறிப்பிடுகிறார். இது கொரோனாவுக்கானது என்று கூறிவிடவும் முடியாது என்கிறார் அவர்.

அறிகுறி, ஐயம் என்று வந்துவிட்டால் வளர்ப்புப் பிராணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதே சிறந்தது என்கிறார் அவர்.

சில சோதனைகளில் பூனைகள், பறவைகள், குரங்குகள், ஆய்வுகளுக்கு வைத்திருக்கும் பிராணிகளுக்கு தொற்றிக்கொள்ளும் என்கிறார் அவர்.

கொரோனா குடும்பம் அகன்றது என்பதால் தோற்று எந்தவகை சார்ந்ததாகவும் இருக்கலாம் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here