பி40 தரப்பினருக்கு கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ ஆலயம் உதவி வழங்கியது

கொரோனா தொற்றினால் உலகமே மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி வருகிறது. அந்த வகையில்  நம் நாட்டில் இருக்கும் பி40 தரப்பினருக்கு  கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயம் உதவி வழங்கியது.

வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு தேவைப்படும் அத்திவாசிய உணவுப் பொருட்களை வழங்கியதாக ஆலயத் தலைவர் சித.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

மனிதர்களுக்கு மிகவும் அவசியமானது உணவு. மேலும் வரும் 14ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் நடமாட்டத் தடை ஏப்ரல் 28ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருப்பதால் மேலும் உதவிகளை வழங்கவிருக்கிறோம் என்றார்.

ஆலயத்தின் வழி தினந்தோறும் உணவு மற்றும்  மிகவும் வசதி குறைந்தவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம்.மக்கள் நடமாட்ட தடை உத்தரவு காலத்தில் கூட்டமாக பொதுமக்கள் வர வேண்டாம் என்ற நோக்கில் நாங்கள் செய்யும் பல உதவிகளை வெளியில் கூறுவதில்லை என்றார்.

ஆலயம் வழிபாட்டுத் தளமாக மட்டுமல்லாமல் சமூக கூடமாக இருக்க வேண்டும் என்பதில் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயம் என்றும் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது என்று சித.ஆனந்தகிருஷ்ணன் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here