இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. புளியந்தோப்பை சேர்ந்தவர் கொரோனாவுக்கு பலியானார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக இருந்தது.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2024 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.