நள்ளிரவில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

வங்காளதேசத்தின் தேசத் தந்தை என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும், அந்நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவர் தவிர மேலும் 4 தலைவர்களை கொன்ற வழக்கில் குற்றவாளியான முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித், இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து வங்காளதேசம் திரும்பிய அவரை டாக்கா போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவருக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் எப்போதும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(ஏப்ரல் 11-ஆம் திகதி) நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டு மத்தியில் சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக  உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here