அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி!

வாஷிங்டன் –

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு, கூடல் இடைவெளி பராமரிப்பு, முகக்கவசம் அணிதல் என்று கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும்கூட அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் விடாமல் துரத்தி வருகிறது.

5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களின் உடல்களுக்குள் கொரோனா வைரஸ் புகுந்து ஆட்டம் போட்டு வருகிறது. கொரோனா வைரசுக்கு இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் பலியாகி வருவது மிகுந்த வேதனை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதுவரை 40க்கும் மேற்பட்ட இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் கொரோனா வைரசால் உயிரிழந்து இருப்பது அவர்களின் குடும்பங்களைத் தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பலியானவர்களில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 பேர் அடங்குவார்கள். குஜராத்தைச் சேர்ந்த 10 பேர், பஞ்சாப் மாநிலத்தின் 4 பேர், ஆந்திராவின் 2 பேர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகி இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here