கோலாலம்பூர், ஏப்.14-
ரிப்பன் வெட்டுவதில் ஆர்வம் காட்டவது, பிரச்சாரத்திற்காக முகநூலைப் பயன்படுத்திக் கொள்வது, மக்களுக்கான உதவி நிதியை சரிசமமாக கொண்டு சேர்க்காதது போன்ற செயல்களை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கைவிட வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவை யாவுமே கடந்த கால பக்காத்தான் நேஷனல் அராங்கத்தின் பாணியாகும்.
இதே பாணியை பெரிக்காத்தான் நேஷனல் பின்பற்ற வேண்டாம் என அவர் பொதுவான தன்மையில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் டத்தோ அடாம் பாபாவை தாம்பாளத் தட்டு வைத்து ஏந்தாத குறையாக முகநூலில் அவரைப் பாராட்டி செய்திகள் வெளியிடப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் நஜிப் மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.