கோலாலம்பூர், ஏப்.15-
நாடு முழுவதுமுள்ள 13 சிறைச்சாலை பயிற்சி மையங்கள் தற்காலிக தடுப்பு முகாம்களாகச் செயல்படும் என பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.
மக்கள் நடமாட்டத் தடுப்புச் சட்டத்தை மீறுவோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பின்னர் இந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
அதிகமான மலேசியர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி வருகின்றனர்.
கைது செய்யப்படுவோர் தடுத்து வைக்கப்படுவதற்கு ஏதுவாக தடுப்பு முகாம்கள் சீர்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.