கோத்தாபாரு, ஏப்.16-
வெள்ளிக்கிழமை தொழுகையை வீட்டிலிருந்தபடியே நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்ற ஆலோசனையை பலர் புறக்கணித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என கிளந்தான் மாநில ஷரியா சட்டக் குழு தெரிவித்துள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் போனால் நிலைமை மோசமாகும்.
இதன் காரணமாகத்தான் வெள்ளிகிழமை தொழுகையை வீட்டிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தி வருகிறோம்.
ஒரு சிலர் பிடிவாதமாக ஒன்று கூடுவது காலத்திற்கேற்ற செயல் அல்ல என கிளந்தான் மாநில இஸ்லாமிய சமய விவகாரத் தலைவர் டத்தோ ச்சே முகமட் ரஹிம் ஜூசோ கருத்துரைத்துள்ளார்.