கட்டுப்பாட்டை மீறிய சுகாதார துணையமச்சர் கைது செய்யப்படுவாரா?

துணையமச்சர் கைது செய்யப்படுவாரா?

கோலாலம்பூர், ஏப்.18-

மக்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டை விதித்திருக்கும் அதே வேளையில் சமூக இடைவெளியை கடபிடிக்காமல் விருந்து நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சுகாதார துணை அமைச்சர் நோர் அஸ்மி கஸாலி கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் மத்தியிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

பேரா மாநிலத்தில் உள்ள சமயப்பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் சட்டத்தை மீறி இவர் கலந்து கொண்டிருப்பதாக ஆதார புகைப்படங்களுடன் தகவல்கள் வெகுவேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு மட்டும்தான் சட்டம் செல்லுமா? பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இதற்கு விதிவிலக்கா எனவும் இணையப் பயன்பாட்டாளர்கள் பரவலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நோர் அஸ்மி கஸாலி மீது கைது நடவடிக்கை இல்லை என்றால் பொதுமக்கள் மீதும் கைது நடவடிக்கை கூடாது என மக்கள் கருத்துரைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here