கோலாலம்பூர்: மொத்த சந்தை வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோவிட் -19 சோதனைக்காக தயாராவதற்காக கோலாலம்பூர் செலாயாங் மொத்த சந்தை இன்று முதல் மூடப்படும்.
மொத்த சந்தையின் அருகிலுள்ள பகுதிகளில் ஊரடங்கு அறிவித்தபின் மொத்த சந்தை திறந்திருக்கும் என்று நேற்று அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சோதனைக்கு வழிவகுக்கும் வகையில் மொத்த சந்தை நேற்று மாலை மூடப்பட்டது. இவை எங்களுக்கு கிடைத்த தகவல்கள் என்று அதிகாரிகள் கூறினார்.
மொத்த சந்தை எப்போது வணிகத்தை மீண்டும் தொடங்கலாம் என்பது குறித்த தகவல் எங்களிடம் இல்லை, ஏனெனில் நேற்று மாலையில் தான் சோதனை தொடங்கியது என்றனர்.
சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் செலாயாங் மொத்த சந்தையைச் சுற்றியுள்ள 8 குடியிருப்புப் பகுதியில் ஊரடங்கு விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்ததாக நேற்று செய்தி வெளியானது. இரண்டு வார உத்தரவு மே 3 வரை அமலில் உள்ளது. சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மட்டுமே பாதிக்கப்படுகின்றன என்று இஸ்மாயில் சப்ரி தெளிவுபடுத்தினார், அதே நேரத்தில் சந்தை EMCO காலத்தில் வழக்கம்போல செயல்படும் என்று நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.