கோலாலம்பூர்: சந்தையில் உள்ளூர் பச்சரிசி போதுமான அளவு விநியோகத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளதாக வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு தெரிவித்தார். 24 மில்லியன் 10 கிலோ உள்ளூர் பச்சரிசி மூட்டைகளை உற்பத்தி செய்வதன் மூலம் விநியோகத்தை உறுதிப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று முகமது மக்களவையில் தெரிவித்தார்.
தற்போது அமைச்சகம் செயல்படுத்தும் முறையை இறுதி செய்து வருகிறது. மேலும் இது எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டவுடன் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் ஒரு அமைச்சர் அறிக்கையில் தெரிவித்தார்.
உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய, உள்ளூர் பச்சரிக்கான விலை உச்சவரம்பு கிலோவிற்கு 2.60 ரிங்கிட்டாக பராமரிக்கப்படும் என்று அவர் கூறினார். உலகளாவிய அரிசி விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், மலேசியர்களுக்கு அரிசி மலிவு விலையில் இருக்க 2008 முதல் விலை மாறாமல் உள்ளது.
அரசாங்கம் அதன் அடுத்த நடவடிக்கையை முடிவு செய்வதற்கு முன்பு அடுத்த ஆறு மாதங்களில் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் என்றும் முகமது கூறினார். உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகப் பிரச்சினை வளர்ந்து வரும் கவலையாக உள்ளது. பல்வேறு பங்குதாரர்கள் அதை நிவர்த்தி செய்ய அரசாங்க நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.









