கோலாலம்பூர்: சுகாதார மேலாண்மை நிறுவனமான (நாட்மா) வீராங்கனைகளுக்கு உதவ 4,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சபூரா நிறுவனம் நன்கொடையாக வழங்கியிருக்கிறது.
கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியில், சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்பு பல முன்னணி நிறுவனங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதாக அமைந்திருக்கிறது. இதற்கான பங்களிப்பு மிக முக்கியமானதாக அமையவேண்டும் என்ற நோக்கத்தில் சபூரா குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி டத்தோ மொஹமட் ஸரீஃப் ஹாஷிம், நாட்மா இயக்குநர் ஜெனரல் டத்தோ மொக்தார் மொஹமட் அப்துல் ரஹ்மானிடம் இந்நன்கொடையை வழங்கினார்.
சுகாதாரப் பணியாளர்கள் தேசிய நாயகர்களளாவர். கோவிட் -19 தொற்றுக்கு எதிரான முக்கிய பாதுகாப்புக்கோடு அவர்களால் வரையப்பட்டிருக்கிறது. பெரிய மலேசிய குடும்பத்தின் ஒரு பகுதியாக பெயர்பதித்திருக்கும் சபூரா நிறுவனம், தொற்றுநோய்க்கு எதிராவும் சக மலேசியர்களைப் பாதுகாப்பதற்கான பங்களிப்பை வலுப்படுத்தவும் இந்நன்கொடையை வழங்கியிருக்கிறது.
பேராசிரியர் டத்தோ டாக்டர் ஹனாபியா ஹருணராஷித் 1,500 இந்த உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டார்.
இவை டானாசபூரா, கோவிட் -19 தொற்றுக்கன நிதியத்தின் மூலம் வழங்ககப்பட்டது, இவை சபூரா குழுமம், சபூரா எனர்ஜி, யயாசன் சிட்டி, சபூரா ஹுசின் பணியாளர்களின் ஒத்துழைப்பில் வழங்கப்பட்டதாகும்..
மலேசியாவில் உள்ள வறிய குடும்பங்களுக்கு இந்த நிதியின் பெரும்பகுதி ,உணவு, கைப்பண உதவியாக இருக்கும். இந்த முயற்சி மற்ற சபூரா இடங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
இந்த மாத தொடக்கத்தில், தேசிய கோவிட் -19 தொற்றுக்கான நிதியத்தின் பயனாக, சபூரா குழுமத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டான்ஸ்ரீ ஷாரில் ஷம்சுதீன், சபூரா குடும்பத்தின் சார்பாக மேலும் ஒரு லட்சம் பங்களிப்பை பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசினிடம் வழங்கினார்.
இதற்கு மேலும் ஒரு லட்சம் வெள்ளியை தி எட்ஜ் கோவிட் -19 நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டடிருப்பதும் குறிப்பிடத்தக்கது.