பெட்டாலிங் ஜெயாவில் சுமார் 700 மாணவர்களுக்கு போக்குவரத்து சம்மன்கள் விதிப்பு!

பெட்டாலிங் ஜெயா:

ஜனவரி முதல் இரண்டு பெட்டாலிங் ஜெயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 689 போக்குவரத்து சம்மன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சிலாங்கூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ எஸ் சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.

13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய இந்த சம்மன்களில், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், காலாவதியான சாலை வரி மற்றும் ஹெல்மெட் பயன்படுத்தாமல் இருப்பது ஆகிய சாலைப் போக்குவரத்துக் குற்றங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.

“இப்பிரச்சனையைத் தீர்க்க, போக்குவரத்து மற்றும் குற்றவியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை Op Didik என்ற நடவடிக்கை மூலம் பள்ளி மாணவர்களுக்காக போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்” என்று அவர் செக்கோலா மெனெங்கா கெபாங்சானில் (SMK) நடைபெற்ற பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான ப்ரிஹாடின் ஓட்டுநர் உரிமத் திட்டத்தில் கூறினார்.

மேலும் சாலைக் குற்றங்கள் தொடர்பில் மாணவர்களிடையே கல்வி மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது தேசிய காவல்துறையின் (PDRM) நடவடிக்கையாகும், இதனை தெளிவு படுத்தினால் அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவார்கள் என்றும் சசிகலா தேவி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here