ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஓரம் கட்டப்படமாட்டார்கள்

ராணுவவீரர்கள் ஓரம் கட்டப்படமாட்டார்கள்

பெட்டாலிங் ஜெயா, ஏப். 22-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஓய்வூதியம் பெறாத சுமார் 180,000 ராணுவ வீரர்கள் பிரிஹாத்தின் ராக்யாட் பொருளாதார உதவியாக 500 வெள்ளி நிதி உதவி பெறுவார்கள் என்று நிதியமைச்சர் டத்தோஶ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 1.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கான 500 வெள்ளி சிறப்பு நிதி பெறுதலில் ஓய்வூதியம் பெறாத இராணுவ வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

இதில், சுமார் 180,000 இராணுவ வீரர்களுக்கும் உதவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இதனால், யாரும் ஓரம்கட்டப்பட மாட்டார்கள் என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) அவர் முகநூல் பக்கத்தில் ஓர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

நடைமுறைகள் மிகவும் இறுக்கமானவை என்ற கருத்து இருந்தது. விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் செயல்முறைக்கு வசதியாக துறைத்தலைவர்களுக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருத்துவ பணியாளர்களுக்கு 600 வெள்ளி கிடைக்கும், அதே நேரத்தில் ஆயுதப்படைகள், போலீஸ், சுங்க, குடிநுழைவு, தீயணைப்பு மீட்புத்துறை, பொது பாதுகாப்புப்படை, மக்கள் தொண்டர் படை(ரெலா) உறுப்பினர்கள் என 200 வெள்ளி வீதம் பெறுவார்கள்.

முறையீட்டின் கீழ் உள்ளவர்கள் உட்பட மூன்று லட்சம் புதிய விண்ணப்பங்களுடன் 7.2 லட்சம் பெறுநர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளன என்றும் ஜஃப்ருல் கூறினார்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் சமீபத்தில் கோவிட் -19 ஐ அடுத்து பிரிஹாத்தின் ராக்யாட் பொருளாதார நடவடிக்கையின் கீழ் மொத்தம் 250 பில்லியன் மதிப்புள்ள உதவியை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here