கொரோனா :ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை விலங்குகளிடமிருந்து வந்திருக்கலாம்-உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை என்றும், கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களின்படி விலங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஜெனீவா,ஏப்ரல் 22-

உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் உகானின் கடல் உணவு சந்தையில் கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக கருதப்படுகிறது, ஏனெனில் அங்குதான் ஆரம்பகால பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இருப்பினும், நோய்த்தொற்றுக்கு ஆளான முதல் நபரை அடையாளம் காண சீனா இதுவரை முயற்சித்து தான் வருகிறது.

சீன நகரான உகானில் 2019 ஆம் ஆண்டில் தோன்றிய இந்த வைரஸ், இதுவரை உலகளவில் 24 கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதித்து 165,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு 40,000-க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் அமெரிக்கா கொரோனா இறப்பு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் தொற்றுநோயைக் கையாண்டது குறித்து டிரம்ப் விமர்சனங்களை எதிர்கொண்டார். இதனைத்தொடர்ந்து உலக சுகாதார அமிப்பின் மிகப்பெரிய பங்களிப்பாளராக இருக்கும் அமெரிக்கா தனது நிதியை நிறுத்துவதாக அறிவித்தது. சீனாவுடன் சேர்ந்து கொரோனா வெடிப்பை குறித்து மறைத்ததாக குற்றம்சாட்டி உலக சுகாதார அமைப்பிற்கு அளிக்கப்படும் நிதி நிறுத்தப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

விலங்கு சந்தையில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மனிதனால் இந்த வைரஸ் உகான் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு நம்புகிறது.

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஃபடெலா சாயிப் கூறியதாவது:-

சரியான ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை என்றும், கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களின்படி விலங்குகளிடமிருந்து வந்திருக்கலாம்.

ஏப்ரல் 20-ம் தேதி உலகசுகாதார அமைப்பு கொரோனா வைரஸில் ஆரம்பத்தில் இருந்தே எச்சரிக்கை ஒலித்தது. கொடிய தொற்று நோய் குறித்து அமெரிக்காவிடம் எதையும் மறைக்கவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையில், ரஷ்யாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் வெரோனிகா ஸ்க்வொர்ட்சோவா, ஒரு ஆய்வகத்திலிருந்து வைரஸ் வருவதற்கான வாய்ப்பை மறுத்து, மிகவும் முழுமையான ஆய்வு நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here