மலேசிய நீதித்துறை அணுகலின் மறுமலர்ச்சி

பெட்டாலிங் ஜெயா, ஏப் 22-

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து, மலேசிய நீதித்துறை அமைப்பு குறிப்பிட்ட வழக்குகளை ஆன்லைனில் விசாரித்துள்ளது .

வழக்குகளின் ஆன்லைன் விசாரணையை நிறைவு செய்வதற்கும் ஆதரிப்பதற்கும், நீதித்துறை அமைப்பு ஒரு பைலட் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஒரு படி மேலே செல்கிறது, இது வழக்கின் நேரடி ஒளிபரப்பை ஆன்லைனில் மக்களுக்கு ஒளிபரப்புகிறது.

இது, திறந்த நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை நேரடியாகக் கேட்பதற்கும், நீதிக்கான முறைகளை உறுதி செய்வதற்கும் பொதுமக்களுக்கு உதவுகிறது என்று நீதித்துறை அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ துறை மூலம் நாளை (ஏப்ரல் 23) காலை 10.00 மணிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆன்லைனில் வழக்கு விசாரணையை முதல் முறையாக நீதித்துறை அமைப்பு நேரடி ஒளிபரப்பு செய்யவிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here