சட்ட விரோத மனிதக்கடத்தல்களின் சூத்திரதாரிகள் கைது

அலோர் ஸ்டார், ஏப். 22-

நாட்டிற்குள் ரோஹிங்கியா இனத்தவர்கள் உட்பட சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கடத்தும் நடவடிகைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு மியான்மர் நாட்டினரை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ) தடுத்து வைத்துள்ளது.

ஏப்ரல் 5 ஆம் தேதி சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக லங்காவி நீரில் கைது செய்யப்பட்ட 202 ரோஹிங்கியாக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கெடா , பெர்லிஸ் கடல்சார் நடவடிக்கையின் இயக்குநர் கேப்டன் ஜூலிண்டா ராம்லி தெரிவித்தனர்.

ஏப்ரல் 16 ஆம் தேதி சிம்பாங் எம்பாட்டில் உள்ள ஒரு வீட்டில் 36 வயதான முதல் நபர் கைது செய்யப்பட்டார், இரண்டாவதாக 31 வயதான யான் குவான் செம்பேடக், யான் என்ற இடத்தில் பெயரிடப்படாத வீட்டில் இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணையில், முதல் சந்தேக நபர், மனித கடத்தல் நடவடிக்கைகள் அனைத்திற்கும் பிரதான சூத்திரதாரி என்பவரின் மைத்துனராக இருப்பது கண்டறியப்பட்டது.

முதல் சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முகவர்களுக்கு பணம் செலுத்தும் பதிவு புத்தகம் ஆதாரமாக சிக்கியது. இது, இரண்டாவது சந்தேக நபரைக் கைது செய்ய வழிவகுத்தது, என்று அவர் இன்று இங்கு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நாட்டின் நீர் வழியாக, குறிப்பாக கெடா, பினாங்கு, ஜோகூருக்கு வெளியே சட்டவிரோதக் குடியேறியவர்களை உள்ளே நுழைய ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் முக்கிய சந்தேக நபரை எம்.எம்.இ.ஏ தற்போது கண்காணித்து வருவதாக ஜூலிண்டா கூறினார்.

ஒவ்வொரு சட்ட விரோத குடியேறிகளிடமும் 1,500 வெள்ளி பெறப்பட்டிருக்கிறது., மேலும் மியான்மார் கடல்பகுதியில் இருக்கும்போது பெரிய படகுகளைப் பயன்படுத்தி அவர்களை ஏற்றிச் செல்வதும், பெரிய படகு கடல் எல்லையைக் கடந்தவுடன் சிறிய படகுகளுக்கு மாற்றிவிடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here