கோலாலம்பூர், ஏப் 22-
அனைத்து மலேசிய விமானப் பயணிகளும் தங்களது சொந்த பாதுகாப்பு முகக்கவசங்களை 2020 ஏப்ரல் 23 முதல் அமல்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்குகிறது.
செக்-இன், போர்டிங், விமான கேபின், பெட்டிகளை இறக்குதல், சாமான்களைச் சேகரித்தல் போன்ற தொடுதல் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.
ஒவ்வொரு பயணியும் விமான ஊழியர்களின் பாதுகாப்பையும் அவர்களின் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காக, மலேசியா ஏர்லைன்ஸின் உள்நாட்டு, அனைத்துலக விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் (குழந்தை தவிர) இப்பாதுகாப்பு நடவடிக்கை பொருந்தும் என்று இன்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்-இன் , போர்டிங் நேரத்தில் ஃபேஸ் மாஸ்க் இல்லாத அல்லது அணியாத பயணிகளை மலேசியா ஏர்லைன்ஸ் ஏற்றுக்கொள்ளாது என்று அது வலியுறுத்தியது.
பயணிகளின் சொந்த வசதிக்காக, குறிப்பாக நீண்ட தூர விமானங்களில் சொந்த பயன்பாட்டிற்காக கூடுதல் முகமூடிகள் கை சுத்திகரிப்பு திரவங்களைக் கொண்டுவர வேண்டும்.
மற்றவர்களின் தனிப்பட்ட இடத்தை மதிக்கவும், தேவைப்படும் இடங்களில் சமூக இடைவெளியைக் கவனிக்கவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதிசெய்யவும் புறப்படும் முன்னும், வருகை செயல்முறைகளில் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கியிருக்கவும் பயணிகள்
நினைவூட்டப்படுகிறார்கள்.
பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பு மலேசியா விமானத்துறைக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.