சீனாவில் உள்ளவர்களைக் குறிவைத்து அம்பாங் யூ.கே குடியிருப்பில் சூதாட்டம்

கோலாலம்பூர், ஏப்.23-

போலீசாரின் இறுக்கமான சோதனையில் கோலாலம்பூர் அம்பாங் யூ.கே ஹைட்ஸ் என்ற இடத்தில் நேற்று நடந்த நடந்த சோதனையில் 25 சீன நாட்டினரை கைது செய்ததன் மூலம் ஒரு நாளைக்கு 135,000 வெள்ளி சம்பாதிக்கக்கூடிய ஆன்லைன் சூதாட்ட தரப்பை முடக்கியுள்ளனர்.

காலை 11.15 மணியளவில் நிகழந்த் இந்தச் சோதனையில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு என்று புக்கிட் அமான் சூதாட்ட, ரகசிய சங்கங்கள் பிரிவு (டி 7) முதன்மை உதவி இயக்குநர் எஸ்.ஏ.சி மொஹமட் ஜானி சே தின் தலைமையில் களமிறங்கினர்.

சீனாவின் ஜியாங்சி குய்ஷோ மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 25 பேரரையும் போலீசார் மடக்கினர்.

“அவர்கள் அனைவரும் சீனாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வீ சாட் குறுஞ்செய்தி பயன்பாடுகள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டட்தாகவும் ஆன்லைன் சூதாட்டம், பந்தய விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதாகவும் கண்டறியப்பட்டது,

சீனாவில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டு, பெரிய, சிறிய புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்ட ‘லக்கி டிரா கனடா 28 , பெய்ஜிங் 28 வகை சூதாட்டங்களை நடத்திவந்ததாக மொஹட் ஜானி கூறினார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க QR குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் பெரிய வெற்றியைப் பெறும் திறனைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இவர்கள் மூன்று மாதங்களாக இயங்கி வருவதாகவும், ரென்மின்பி என்ற நாணயத்தை சூதாட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது .
இந்த சோதனையில் பிரதான கட்டுப்பாட்டுக் கணினி, 19 மடிக்கணினிகள், 74 மொபைல் போன்கள், இரண்டு திசைவிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக மொஹட் ஜானி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here