உணவு விநியோகிக்கும் பையன் விபத்தில் மரணம்

கோப்பு படம்

ஜாசின், ஏப்.24-

உணவு விநியோகிப்பாளர் சலை விபத்தில் மரணமடந்திருக்கும்  செய்தியை ஜாசின் மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.குணசீலன் உறுதி செய்தார்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையின் போது அதிகம் நடமாடுகின்றவர்களாக இருப்பவர்கள் உணவு விநியோகிப்பாளர்கள்.

அவர்களில் ஒருவரான கிளந்தான் கோத்தாபாரு பகுதியைச்சேர்ந்த முகமட் ஃபாகுல்ரோசி ஃபெளசி வயது 22 என்பவர் உணவு விநியோகிப்பாளர் தெஹெல் என்ர இடத்திற்குத் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் மரணமடந்தார்.

இரவு 12.40 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் இரண்டுமணி நேரம் கழித்தே மருத்துமனைக்குக் கொண்டுவரப்பட்ட அந்த இளைஞர் சிக்கிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

52 வயது நபர் ஓட்டிவந்த காரில் மோதிய விபத்தில் இத்துயரச் சம்வபவம் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. எதிரே வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்ப்பதில் வாகனமோட்டி காயமின்றி தப்பினார்.

கடந்த ஏப்ரல் 18 ஆம்நாள் இதே போன்று  உணவு விநியோகிக்கும் பையன் உணவு அனுப்பும்போது மரணமடைந்திருக்கிறார் என்பதும் குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here