வாஷிங்டன்,ஏப்ரல் 25-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிபுணர்களுடனான உரையாடலின் போது லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் கொரோனா வைரசை அழிப்பதால் அதனை மனித உடலுக்குள் செலுத்திக்கொள்வதால் கொரோனாவிலிருந்து விடுபடமுடியுமா என்பதை சோதித்துப்பார்ப்பது தொடர்பாக கிண்டலாக கேள்வி எழுப்பி இருந்தார்.ஆராய்ச்சியாளர்கள் இந்த கிருமிநாசினிகளை கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்தி என்ன நடக்கிறது என கண்டறிய முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று கூறியிருந்தார் டிரம்ப்.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து, தங்களிடம் லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்திக்கொள்வது பயனளிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருவதாக லைசால் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதற்கு பதிலளிக்கும் விதமாக, எக்காரணம் கொண்டும் தங்கள் தயாரிப்புகளை யாரும் சாப்பிடக்கூடாது என லைசால் மற்றும் டெட்டால் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லைசால் மற்றும் டெட்டால் போன்ற கிருமி நாசபி தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளைக் குடிக்கவோ, உடலில் ஊசி மூலம் செலுத்திக்கொள்ளவோ வேண்டாம் என மக்களை வலியுறுத்தியுள்ளனர்.எங்கள் தயாரிப்புகள் எந்த நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்டனவோ, அதற்காக மட்டுமே, அதுவும் எப்படி பயன்படுத்தவேண்டும் என தயாரிப்பின் மீது கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.