ஜார்ஜ் டவுன்: இங்குள்ள லிட்டில் இந்தியாவில் உள்ள பாரம்பரிய வளாகத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அடிக்கடி மதிய உணவைப் பெறும் தொழில் நுட்ப வல்லுநரரான கே.குமாரவேலு, 35, பொட்டலம் கட்டும் உணவால் அமர்ந்து ருசிக்கும் வாழை இலை உணவு போல் அமையாது என்கிறார்.
எனக்கான உணவை வாழை இலையில் பரிமாறும்போது, அதன் சுவையே தனியானது. அந்தச் சுவையை சொல்வது கடினம். அது, உணர்வு. சில சமயங்களில், இரண்டாவது தடவையாக உணவைக் கேட்டு வாங்கவும் செய்வதை நினைவு கூருகிறார் அவர். தீவிர சைவ உணவுப் பிரியரான விவியன் கோ 45, ஓர் ஆசிரியர். வாழை இலையில் பரிமாறப்படும் மதிய உணவைத் தவறவிட்டதாக கூறினார்.
இப்போது, எடுதுச்செல்லும் பொட்டலத்தில் உணவுக்கான் முழுமையான தீர்வு காண வேண்டும். கூடுதலான பதார்த்தங்களை ஆர்டர் செய்யவதும் சிரமமாக இருக்கிறது என்கிறார் அவர். பயனீட்டாளர்கள் தங்களுக்கான உண்மையான உணவைப்பெற ஏங்கிக்கொண்டிருக்கும்போது, உணவக உரிமையாளர்கள் அதிக வாடகையால் பாதிக்கப்பட்டிருப்பதையும் ,வாடிக்கையாளர்கள் குறைந்த்தாலும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
பினாங்கு தெருவில் வாழை இலை உணவு பரிமாறும் இரண்டு விற்பனை நிலையங்களை வைத்திருக்கும் உணவக உரிமையாளர் வி.ஹரிகிருஷ்ணன் தன் சிரமத்தை பரிமாறுக்கிறார். இரு விற்பனை நிலையங்களிலும் ஒரு நாளைக்கு 500 வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்றும் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையால் 20 விழுக்காட்டினர் மட்டுமே வருவதாக அதிர்ச்சியில் இருக்கிறார்.
இரு விற்பனை நிலையங்களிலும் சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளனர். ஏப்ரல் மாதத்தில், உணவகங்களைத் தக்கவைக்க தமது பிற வணிகங்களிலிருந்து நிதியை கைமாற்ற வேண்டியிருந்தது. ஆனால், கட்டுப்பாடு மே 12க்கும் அப்பாலும் நீட்டிக்கப்பட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்பதில் அச்சமாக இருக்கிறது.
மற்றுமோர் உணவக உரிமையாளரான டத்தோ என்.ராமநாதன் கூறுகையில், இது அவருக்கு இரட்டை அடி என்கிறார், ஏனெனில் அவரது வாடிக்கையாளர்களில் 70 விழுக்காட்டினர் இந்திய முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ரமலான் மாதத்தில் இது மோசமாகி வருகிறது, ஏனெனில் முஸ்லிம் வாடிக்கையாளர்கள் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையில் பகல் உணவுக்கு வரமாட்டார்கள். இரவு 7.30 மணிக்குள் கடையை மூட வேண்டியிருப்பதால், இரவு உணவுக்கும் வழியில்லை, சாத்தியமுமில்லை என்பதால் இது கடினமான நேரமாகவே இருக்கிறது..
நாங்கள் கடை வளாகத்திற்கு அதிக வாடகை செலுத்துகிறோம், சுமார் 15 தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறோம், அவர்களின் சம்பளத்தையும் நாங்கள் வழங்க வேண்டும், என்கிறார் அவர்.
தொழிலதிபர் எஸ். சரளா தன் சிரமங்களைக்கூறுகிறார். தமது உணவகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 300 பேருக்குமேல் வாடிக்கையாளர்கள் வருவார்கள் . ஆனால், இப்போது சுமார் 50 பொட்டலங்களுக்கான ஆர்டர்களை மட்டுமே பெறுவதாகக் கூறுகிறார். கடைக்கான வாடகை ஒரு மாதத்திற்கு 4,500,வெள்ளியாகும். ஏழு தொழிலாளர்களுக்கும் சம்பளம் தரவேண்டும். மே 12 ஆம் நாளுக்குமேல் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டால் இந்தத் தொழிலைத் தொடர்வது சாத்தியமாகவே இருக்காது என்கிறார் அவர்.