சிங்கப்பூரிலிருந்து மலேசியர்கள் நாடு திரும்ப நுழைவு அனுமதி அவசியம்

ஜோகூர் பாரு: திங்கள்கிழமை (ஏப்ரல் 27) தொடங்கி, சிங்கப்பூரிலிருந்து திரும்பி வர விரும்பும் மலேசியர்களுக்கு சிங்கப்பூரிலுள்ள மலேசிய தூதரகத்தில் நுழைவு அனுமதி வாங்க வேண்டும்.

அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பெயர், அடையாள அட்டை எண், பாஸ்போர்ட் எண், புறப்படும் தேதி மற்றும் அவர்கள் பணிபுரியும் பாஸின் நகல், நீண்ட கால பாஸ், நிரந்தர வசிப்பிட பாஸ் அல்லது மாணவர் பாஸ் ஏதாவது ஒன்றினை சமர்பிக்க வேண்டும்

அனைத்து ஆவணங்களும் சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு stmsg@mhc.org.sg என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும், அவர்கள் மலேசியாவுக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிடும் இரண்டு நாட்களுக்கு முன்பே விண்ணப்பம் செய்யப்பட வேண்டும் ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர். வித்யானந்தன் கூறினார்.

நுழைவு அனுமதி அவர்களுக்கு மின்னஞ்சல் வழி அனுப்பப்படும். மேலும் அவர்கள் நாட்டிற்குள் நுழையும்போது அந்த ஆவணத்தை மலேசிய குடிவரவு அதிகாரிகளுக்குக் காட்ட வேண்டும் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சனிக்கிழமை (ஏப்ரல் 25) நிலவரப்படி, சிங்கப்பூரில் கோவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை 12,693 ஆக உள்ளது.

முன்னதாக, வித்யானந்தன், சிங்கப்பூரிலிருந்து திரும்பும் மலேசியர்கள் இனி வீட்டில் சுய தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியிருந்தார். சிங்கப்பூரிலிருந்து மலேசியர்கள் திரும்பும் எண்ணிக்கை புதன்கிழமை (ஏப்ரல் 22) முதல் தினசரி 300 பேரில் இருந்து   800 பேர் வரை உயர்ந்துள்ளது என்றர் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here