நீங்கள் வீட்டிலேயே இருங்கள் – உங்களுக்காக நாங்கள் வேலைக்கு செல்கிறோம் என்று தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிக்கு செல்லும் முதல் நிலை பணியாளர்களுக்கு மஇகா பெக்கான் பண்டார்பாரு சுங்கைபூலோ கிளை முதல் நிலை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்கியதாக கிளை தலைவர் எம்.ரவி தெரிவித்தார்.
தற்போது அமலில் இருக்கும் எம்சிஓ காலகட்டத்தில் முதல் நிலை பணியாளர்களையும் மறந்து விடக்கூடாது என்று மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனைத்து தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தியிருப்பதை ரவி மேற்கோள் காட்டினார்.