கட்டார் எமிரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றார் பிரதமர் முஹிடின், நோய் பரவுவதைத் தடுக்க மலேசியா எடுத்த நடவடிக்கைகளை ஷேக் தமீம் நெருக்கமாகப் பின்பறுவதாகக் கூறினார். பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் தற்போதைய உலகளாவிய கோவிட் -19 தொற்று நோய் பற்றிய பேச்சு அதிகமகவே இருந்தது .
நாட்டில் கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட எட்டு மலேசியர்களுக்கு உதவ கட்டார் வழங்கிய உதவிகள் குறித்து அரசாங்கத்தின் சார்பாக பாராட்டியதாக பிரதம்ர் ஓர் இடுகையின் மூலம் தெரிவித்தார். வைரஸ் தொற்று தவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் , நலன்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
வர்த்தகம், பொருளாதார பிரச்சினைகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான பல்வேறு விஷயங்களைப் பற்றியும் நாங்கள் பேசியதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் புதிய சாத்தியங்களை ஆராய்ந்து, தற்போதுள்ள ராஜதந்திர உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் புதுப்பித்டுகொண்டதாக அவர் கூறினார்.
மலேசியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு ஷேக் தமீமும் வாழ்த்து தெரிவித்ததாக முஹிடீன் கூறினார். கோவிட் -19 தொற்றுநோய் முடிந்ததும் ஷேக் தமீம் தன்னை கட்டாருக்கு அழைத்ததாகவும் அவர் கூறினார். மலேசியாவுக்குச் வருமாறு அவருக்கு இதேபோன்ற அழைப்பையும் விடுத்ததாகக் கூறினார்.