உள்ள படியே நாட்டில் கொரோனா குறைந்துதான் இருக்கிறது. குறைந்துதான் வருகிறது. அப்படியென்றால் புதிதாக 72 பேர் தொற்றில் இருக்கிறார்களே என்பது எப்படி?
புதியவர்களில் பலர் மாணவர்கள் என்பது அதிர்ச்சியல்ல. எதிர்ப்பார்த்ததுதான். இவர்களைத் தவிர்த்து 22 பேர் மட்டுமே இங்குள்ள இயல்பான வழக்காக இருக்கின்றன என்றால் கொரோனா எதிர்ப்பை சுகாதாரத்துறை வெகு பிரயத்தனத்துடன் கையாண்டு வருகிறது என்பதும் மிகத்தெளிவாகிறது. இதில் ஐயமே இல்லை.
மாணவர்கள், என்பதில் வெளிநாட்டில் படிக்கும் உயர்க்கல்வி மாணவர்கள் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படக்கூடியவர்கள் என்பதால்தான் அவர்களைப் படிக்கும் இடத்திலேயே இருக்கும்படி மலேசிய சுகாதரத்துறை கூறிவந்தது.
ஆனால், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இது பெரிய இடராகவே இருந்து வந்திருக்கிறது. கல்வியைத் தொடரமுடியவில்லை. கல்விக்கு அடைப்பு, தங்குமிட வாடகை, உணவு என்றெல்லாம் துரத்தும்போது, சொந்த நாட்டுக்குத் திரும்பவதே மேல் என்று உயர்க்கல்வி மாணவர்கள் நினைத்ததிலும் தவறு இல்லை.
அவசரப்பட்டதிலும் குற்றமில்லை. மாணவர்களின் அவசரத்தில் நியாயங்கள் சற்று தூக்கலாகவே இருக்கின்றன என்பதால் அவர்களின் புலம்பல்களில் அர்த்தமிருக்கிறது என்பதை ஏற்கவேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது.
இந்தோனேசியாவின் மகேந்தன் வட்டாரத்தின் பிராசாண்ட்ரன் பகுதியிலிருந்து திரும்பிய மாணவர்கள் 72 பேரும் கொரோனா தொற்று உள்ளவர்கள் என்பது தெளிவானதால், மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 164 என்றாகியிருக்கிறது. இதில் ஒருவர் மட்டுமே தேறியிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 3ஆம் நாளிலிருந்து 24,000 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பாட்டவர்கள். 55 பேர் கோரோனா சிகிச்சையிலிருந்து விடுபட்டிருக்கின்றனர். 4,087 பேர்தேறியிருக்கின்றனர். இதில் இறப்பு 100 என்ற அளவிலேயே இருக்கிறது என்று டத்தோ டாக்டர் நோர் இஷாம் தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் நான்காம் கட்ட அட்டவணையில் சில தளர்வுகளை வரையறுத்திருக்கின்றனர். அதைப் பின்பற்றுவதில் ஆரம்ப நிலை இடர்பாடுகள் இருக்கலாம். பின்பற்றினால் நன்மைகள் நிச்சயம் உண்ட பள்ளிகளுக்கு இன்னும் அனுமதி இல்லை. ஆனாலும் பொருளாதாரத்திற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டாலும் நிறுவனங்கள் கண்காணிக்க்கப்படல் வேண்டும் என்பதை சுகாதாரத்துறை உணர்ந்திருக்கிறது.
ஒன்றை மட்டும் நம்பிக்கையோடு கூறுகிறார் டாக்டர் நோர் இஷாம். இயல்பு நிலைக்கு மாறும் சாத்தியக்கூருகள் அராயப்படுகின்றன என்றாலும் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி என்பது மக்களின் நடவடிக்கைகளைத் தொட்டே அமையும் என்கிறார்.