புத்ரா ஜெயா:
நாளை திங்கட்கிழமை தொடங்கி ஒரு காரில் நால்வர் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்டானா புத்ராவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
சொந்த வாகனத்தில் பயணிக்க மட்டுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
நான்கு பேருக்கு மேல் பயணிக்க அனுமதி இல்லை.
தேவை இருப்பின் மட்டுமே நால்வர் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அரசாங்கம் விதித்துள்ள சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது போன்றவை தொடர்ந்து அமல்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.