மாமன்னர் தம்பதியர்தம் வீர வணக்கம் ஓர் அங்கீகாரம்

சினிமா என்றால் யார் ஹீரோ என்பதை வைத்துதான் படத்தின் வெற்றி அமையும். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் என்றால் படையில் தளபதி ஹீரோவாகிவிடுவார். போரில் வெற்றிபெற்றுவிட்டால் அதற்கு வேறு அர்த்தங்களும் வெற்றிவிழாக்களும் உண்டு.

இப்போது அப்படிப்பட்ட யுத்தங்கள், போராட்டங்கள் எல்லாம் இல்லை. இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டே பொழுது போக்காய் அணு போர் நடத்துகிறார்கள். அனுப்புவோரும் மாற்றுச் சிந்தனையால் அழிப்பு பற்றியே சிந்திக்கிறார்கள். சில நாடுகளில் வான்படை, தரைப்படை, எப்படையும் சண்டைக்காக இல்லை. அனைத்தும் நாட்டின் தற்காப்புக்காக மட்டுமெ பயிற்சி பெற்றுவருகின்றன. ஆபத்து காலத்தில் உதவுவதற்கும் படைகள் இயங்கின்றன. அவர்களின் சேவைகள் போற்றப்படத் தக்க முதல்நிலையில் இருக்கின்றன.

ஒவ்வொரு பிரிவும் நாட்டையும், அரசாளுமையையும் காக்கின்ற தீவிர பொறுப்போடுதான் செயல்படுகின்றன. அனைவரும் அரசருக்கு மரியாதை வீரவணக்கம் செய்வதை மரபு வழிவழியாகக் காப்பாற்றி வருகின்றனர்.

இதையும் தாண்டி, மாமன்னர் தம்பதியர் வீரவணக்கம் தெரிவித்திருக்கும் ஒரு துறை என்றால் அது தாதியர் துறையாகத்தான் இருக்கும். அதனால்தான் இதை முன்னணியில் வைத்திருக்கிறார்கள். இதனால் மருத்துவத் தாதியர்களின் புகழ் மேலும் சிறப்படைத்திருக்கிறது. தாதிமை என்பது வழக்கமான சேவைப் பட்டியலில் உள்ள அரசு பணியாகத்தான் இதுவரை கருதப்பட்டது. அவர்களின் பணிக் கடமையைத்தான் அவர்கள் ஆற்றி வந்திருக்கிறார்கள் என்பதாகவும் பேசப்பட்டது.

ஆனாலும், கொரோனா தொற்று ஒழித்துக்கட்டும் உத்வேகத்தோடு புறப்பட்டிருக்கும் இத்தருணத்தில், உயிர்ப் பணயம் வைத்து செயல்படுவது அசாதரணம் அல்ல. அதற்கான துணிச்சல் மிகத் தேவை. எதிரியை எதிர்கொள்வதை விட, தொற்று நோயை எதிர்கொள்ளும் துணிச்சல் விவேகமானது. அதைத் தாதியர்கள் செய்திருக்கிறார்கள், செய்தும் வருகிறார்கள். அத்தொற்றின் கொடுமை ஆழமானது. அது, இன்னும் ஓயவேயில்லை. இந்த அலை எப்போது ஓயும் என்றும் தெரியவில்லை.

தாதியர்களும், நீயா? நானா? என்று தொற்று நோயுடன் உயிர்ப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நாட்டின் முன்னணி ஹீரோக்கள் இவர்கள்தாம். இவர்களின்றி உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. கொரரோனா என்ற் உண்மைச் சினிமாவின் நாயகர்கள் இவர்கள்.

சினிமாக்காரர்களை விட நிஜ ஹீரோக்கள் ஆராதிக்கபடவேண்டும் என்பதும் மரபுதான். தாதியர் தினம் உணர்த்தியிருக்கிறது. மானன்னர் தம்பதியர் தாதியர்களுக்கு முதல் மரியாதை செலுத்தும் வண்ணம் அவர்களுக்கு வீர் வணக்கம் செய்திருப்பது ஒன்றே மிகப்பெரிய அங்கீகாரம்..

தாதியர் தினத்தில் மட்டுமா அவர்களைப் பாராட்ட வேண்டும்? மருத்துமனை செல்லும் போதெல்லாம் வாழ்த்துகள் கூறலாமே. கைகுலுக்குவது நல்லதல்ல என்றாகிவிட்டது. மூன்று மீட்டர் தூரம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாகிவிட்டது. இதுதான் இனி தொடர்பழக்கமாகிவிடும். எப்போதுமே இதுதான் நல்லது. தாதியர்களுக்கு எப்போதுமே வணக்கம் செய்வோம் வாரீர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here