தாதிமைப் போற்றுவோம்

தாயின் பண்புக்கு சரிநிகராய் இருப்பது தாதிமை என்பார்கள். இப்படிச் சொல்லும்போதே தாய்மை உணர்வு தவறாமல் பொங்கும். தவறாக எண்ணவும் தோன்றாது. அவர்களின் குடும்பத்தைக்கூட சரிவர கவனிக்க முடியாமல் இருப்பவர்களும் உண்டு.

தாதியர் என்று சொல்வதில் தனிச்சிறப்பு இருக்கிறது. மானுடப்பிறவியில் அர்த்தநாரி என்ற தெய்வீகப்பிறவி உண்டு. சிவனையும் அர்த்த நாரீஸ்வரர் என்று சொல்வார்கள். ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத ஓர் உலகத்தோற்றம் அது. அதற்குள் தாய்மை உணர்வு மிக அதிகம். அந்த சிவனுக்கீடானவர்களாக இருக்கும் அர்த்தநாரிகளான திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் பெற்றால் சிவனின் ஆசீர்வாதம் பெற்றதாக ஐதீகம்

தாதியர்களும் நோயாளிகள் முன் அர்த்த நாரீஸ்வரர்கள் என்று சொல்வதில் குற்றமில்லை. அவர்களில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு.

நோயாளிகள் விரைவில் நலம் பெறுகிறார்கள் என்பது மருந்தால் மட்டும் அல்ல. மருந்தில் கலவைகள் இருக்கும். அத்ற்கு அப்பாலும் அதில் பாசம், அன்பு , அரவணைப்பு கலந்திருக்கவேண்டும். இதை மருந்தாகக் கொடுக்கும்போது நோய்விரைவில் குணமாகிறது. இதைத்தான் தாதியர்கள் செய்கின்றனர். தாதியர்களால்தான் மருத்துவர்களுக்குச் சிறப்பு. மருத்துவர்களின் வலது கையாக இருப்பவர்களே தாதியர்கள்தாம்.

நீதி தேவதையின் கண்கள் கறுப்புத்துணியால் கட்டப்பட்டிருக்கும். அதே போன்று மருத்துவத் துறையிலும் செய்யலாம். மருத்துவத்திற்கு நிறபேதம், இன பேதம் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் முதலில் அவர்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும். தாதியர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் அதற்கான அவசியம் ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. நீதி தேவதை வரிசையில் மருத்துவத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தாதியர்களின் பணி மிகச் சிரமமானப் பணி. நோயாளிகளின் வேதனைகளைl மானசீகமாக உணர்கின்றவர்கள். பலருக்கு இது தெரியாது. அவர்களின் சிரமத்தை வெள்ளாடை மறைத்துக்கொள்ளும். முகம் கூட சோகத்தைக் காட்டாது. நோயிலிருந்து குணமானவர்களைக் கண்டு வாழ்த்தும் கூறுவார்கள்.

தாய்மைக்கு உதாரணம் என்றால் தாதியர்களைக் கூறுவதில் தப்பே இல்லை. ஆதலால் தாதிமைப் போற்றுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here