கோலாலம்பூர், மே. 16-
ஜாலான் புடுவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதி ஊரடங்கு தொடர்பில் அங்குள்ள குடியிருப்பாளர்கள் தேவையான பொருட்களை வாங்க அரை மணி நேரம் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணி தொடங்கி அங்குள்ள குடியிருப்பாளர்கள் வரிசையில் நின்று வெளியில் சென்று வர அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அனைவரின் பெயர், தொலைப்பேசி எண் பெறப்பட்ட பின்னர் அரை மணி நேரம் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், ஜாலான் லண்டாக், ஜாலான் பாசார், ஜாலான் புரூணை ஆகிய இடங்களில் போலீஸார் மற்றும் ராணுவ அதிகாரிகள் கடுமையாக கண்கானித்து வருகின்றனர்.