புத்ராஜெயா: கோவிட் -19 வைரஸில் 200 க்கும் மேற்பட்ட போலி செய்திகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன என்று டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
மே 17 ஆம் தேதி நிலவரப்படி, போலீசார் மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (எம்சிஎம்சி) இந்த விவகாரம் தொடர்பாக 265 விசாரணை பதிவுகளை பெற்றுள்ளன என்று தற்காப்பு அமைச்சரான அவர் கூறினார்.மொத்த எண்ணிக்கையில், 178 வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன, 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, 11 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பபட்டது. மேலும் 18 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
தகவல் அல்லது செய்திகளை பரப்புவதற்கு அது சரியான தகவலா என்று பார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவர்கள் sebenarnya.my இல் சரிபார்க்கலாம்” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (மே 17) தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். போலி செய்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறை மற்றும் எம்.சி.எம்.சி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
போலி செய்திகளை பரப்பும் எவருக்கும் எதிராக அதிகாரிகள் சமரசம் செய்ய மாட்டார்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். ஒரு பிரபலர் கூட சமீபத்தில் போலி செய்திகளை பரப்பியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், பகிர வேண்டாம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பொது சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் மார்ச் 30 முதல் நாடு முழுவதும் 76 மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களில் மொத்தம் 6,491 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
சனிக்கிழமை (மே 16), 13 மாநிலங்களில் 30 மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களை உள்ளடக்கிய 86 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, இதில் ஜோகூரில் 25, சபாவில் 16, மலாக்காவில் 15 மற்றும் சரவாக் 10 நடவடிக்கைகள் அடங்கும்.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், இஸ்மாயில் சப்ரி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 243 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் 15,290 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்றும் கூறினார். ஏப்ரல் 3 முதல், மொத்தம் 36,900 மலேசியர்கள் மற்ற நாடுகளிலிருந்து திரும்பி வந்துள்ளனர். அந்த எண்ணிக்கையிலிருந்து, 28,984 பேர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.