சுற்றுலாத் துறையை மேம்படுத்தத் திட்டம்

புக்கிட் பெண்டேரா –

பினாங்கு மாநிலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், அதே வேளையில் பசுமையான நடைபாதைகளை உருவாக்கவும் மாநில அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது என்று பினாங்கு புக்கிட் பெண்டேராவுக்கு வருகை மேற்கொண்ட மாநில முதல்வர் சௌ கொன் இயோ தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகளுக்கு கதவு திறக்கப்படும்போது மேற்கொண்ட திட்டமும் செயலாக்கம் பெறும் என்று முதல்வர் கூறினார்.
பினாங்கு மாநில முதலமைச்சருடன் வருகைத் தந்த மாநில சுற்றுலா மேம்பாடு, கலை, கலாச்சார மற்றும் பாரம்பரியக் குழு தலைவர் இயோ சூன் ஹின் முதல்வரை தொடர்ந்து மேலும் விவரித்தார்.

அதே வேளையில் மாநிலங்களுக்கிடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான அடிப்படை திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பினாங்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் குழுவினருடம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியபோது பசுமை மண்டலம் கொண்ட பகுதிகள் மற்றும் மாநிலங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

பினாங்கு மாநில மக்களிடம் சுற்றுலாத் துறைக்கான ஊக்குவிப்பை நாங்கள் தொடங்கியப் பிறகு, பசுமை மண்டல பக்கத்து மாநிலங்களுக்கும் சுற்றுலாத் துறையை திறப்போம் என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட இந்த சில மாதங்களுக்குள் புதிய கோவிட் -19 தொற்று பதிவுகள் தீவிரமாக குறைவதை பார்க்கும்போது, இந்த ஆண்டு பிற்பகுதியில் பினாங்கு அதன் சுற்றுலாத் துறையை படிப்படியாகத் திறக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று இயோ தனது பினாங்கு கொடிமலை பயணத்தின்போது விவரித்தார்.

புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஹான் வாய், பினாங்கு மாநகர கழகத்தின் மேயர் டத்தோ யூ துங் சியாங் பினாங்கு கொடிமலை பகுதிக்கு சென்று சுற்றுலாத்துறை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

பினாங்கு மாநில சுற்றுலாத்துறையின் திட்டம் கூடல் இடைவெளி கட்டுப்பாடுக்கு உட்பட்டு திட்டம் வரையறுக்கப்படும் என்றும் அவர்கள் விவரித்தனர். கடந்த மே 15இல் வட்டமேசை கலந்துரையாடலில் 15 பேர் கலந்துகொண்டு பினாங்கு மாநில சுற்றுலாத்துறை தொடர்பாக விவாதித்தனர்.

சுற்றுலாத் துறை மேம்பாட்டில் தடம் பதிக்கும் பட்சத்தில் அடுத்த மாநிலமான கெடா அதனை அடுத்து பெர்லிஸ் மாநிலமும் பினாங்கு சுற்றுலாத்துறைக்கு வருகை அளிப்பதை உறுதிப்படுத்திவோம் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here